Friday 31 May 2013

13. குழந்தைச் செல்வம் வேண்டுமா? பாம்பன் சுவாமி அருளிய மந்திரங்கள்!

முருகப்பெருமான் அருள் பெற்ற ஞானியருள் குமரகுருதாசரான பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதருக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர். முருகப்பெருமானையே வாழ்வில் முழுதும் பற்றுக்கோடாகக் கொண்டு முருகனருளால் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். செந்தமிழில் 6666 பாமாலைகளைப் புனைந்து முருகனுக்குப் பூமாலையாகச் சூட்டி மகிழ்ந்தவர். அவர் இயற்றிய 6666 பாடல்களுள் 60ஆவது மண்டலத்தில் 4-ஆவது அத்தியாயத்தில் உள்ளது வேட்குழவி (குழவி-குழந்தை) வேட்கை. இது கலிநிலைத்துறையில் அமைந்த பாக்களை உடையது.

இப்பாடலின் அடிக்குறிப்பில், "இருத்திருப்பத்து, காலை, மாலை பூஜிக்கப்பட்டுப் பத்திப்பிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்'' என்று பாம்பன் சுவாமிகள், இப்பாடலைப் படிப்பதனால் உண்டாகும் பலனைக் குறிப்பிட்டுள்ளார்.

நன்மக்கட் பேற்றை விரும்புபவரும் சந்ததி விருத்தியாக விரும்புபவரும் இதைப் பாடிப் பலன் பெறலாம். வேட்குழவி வேட்கையில் மொத்தம் பத்துப் பாடல்கள் உள்ளன.

பதினே டொழன்றும்விழை செய்ய பாதமோலிடநன்
மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
கதியே வேற்குழவி நினைக் காத லாற்றழுவ
நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே! (1)

சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன்குழைகள்
மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவி
ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
கூவை வெறுத்தகண்க ளிச்சை கொள்ளு கினிறனவே! (2)

பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ 
சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து 
தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ 
கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே. (3)

பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக் 
கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை 
என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ 
உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே. (4)

எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங் 
கண்ணே செங்குழுவீ யென்றன் கண்க ணாடழகே 
தண்ணே றும்வதன முத்தந் தாரா யோயிறிது 
நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ (5)

முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு 
வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ் 
சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள 
வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ. (6)

ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல் 
வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள் 
மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்துகொள்ள 
மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ (7)

பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும் 
இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா 
அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென் 
துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ. (8)

கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண் 
கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள் 
பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன் 
தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே. (9)

மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக் 
காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான் 
ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன் 
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ. (10)