Saturday, 26 March 2016

15. புற்றுநோய் போன்ற தீராத வியாதிகள் குணமாக ...


உலகம் உய்வதற்காக பல அருட்பாடல்களை அருளியவர்கள் நமது அருளாளர்கள். அருளாளர்களில் ஒருவரான நமது திருஞானசம்பந்தர் தில்லையில் அருளிய இப்பதிகம் தீராத நோய்களை தீர்க்க வல்ல வல்லமை உடையது. சிற்றம்பலநாதனை நாள்தோறும் ஏத்துவார்க்கு தீராத நோயெல்லாம் தீர்வாகும் என்று உறுதிபடச் சொல்கிறார் சம்பந்தப்பெருமான்.

இப்பாடலை உள்ளம் உருக ஓதி  பலனடைமோவாக..


கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே. (1)

பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
பிறப்பில் பெருமானைப் பின்றாழ் சடையானை
மறப்பி லார்கண்டீர் மைய றீர்வாரே. (2)

மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுட்
பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்
செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே. (3)

நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்து மின்ப மின்பமே. (4)

செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே. (5)

வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்
திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய
கருமா னுரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே. (6)

அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தா னுலகேத்தச்
சிலையா லெயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்
தலையால் வணங்குவார் தலையா னார்களே. (7)

கூர்வா ளரக்கன்றன் வலியைக் குறைவித்துச்
சீரா லேமல்கு சிற்றம் பலமேய
நீரார் சடையானை நித்த லேத்துவார்
தீரா நோயெல்லாந் தீர்த றிண்ணமே. (8)

கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
காணார் கழலேத்தக் கனலா யோங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே. (9)

பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே. (10)

ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்
சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே. (11)

முதல் திருமுறை / 080 கோயில்

Wednesday, 20 August 2014

14. நெடுநாள் பிள்ளை வரம் இல்லாதவர்கள் சொல்லவேண்டிய மந்திரம்!

சேய்த்தொண்டர் புராணத்தில், நாகனார், எட்டாத தம் மகவு நோக்கை எட்டவேண்டுமென முருகனிடம் குறையிரந்ததாக எட்டுப்பாடல்களை அமைத்துள்ளார் தேனூர் வரகவி வே.ச.சொக்கலிங்கம் பிள்ளை, இவற்றை நிதம் பாராயணம் செய்தால் பிள்ளை வரம் வேண்டுவோர் அனைவருக்கும் சட்டிப்பெருமான் இட்டத்தை நிறைவேற்றுவான் என்பது திண்ணம்! திண்ணம்!! – செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார்.



பிள்ளைமுகம் பாராப் பெருமலடர் என்றுலகோர்
எள்ளிநகை யாட எளியோமை விட்டனையோ
வெள்ளி மலை அத்தன் விழிகுளிறு மாறுதினம்
துள்ளி விளை யாடுசுயஞ் சோதிச் சுடர்க் கொழுந்தே.

மைந்தர்முகம் பாரா மலடரென்று மாநிலத்தோர்
நிந்தைசெய வாடும் நிலையிலெமை விட்டனையோ
இந்து நுதல் அம்மை இருகண் குளிரும்விதம்
சுந்தரக்கூத் தாடுசுயஞ் சோதிச் சுடர்க் கொழுந்தே.

தமரும் பிறருந் தனயனிலார் என்றிகழ
விமல எளியோங்கள் வெட்கினோம் வெட்கமற
அமரர் பெருமானுக் காருந் திருஅளித்த
குமரையா நீஉன் குளிர்கண்ணாற் பாராயோ.

சந்ததிகள் இல்லாச் சழக்கர் இவர்களென்றே
இந்த உலகோர் எமைஇகழ்ந்து கூறஉளம்
வெந்தையா எந்தையுனை வேண்டினோம் வேட்கையறக்
கந்தையா நீஉன் கடைக்கண்ணாற் பாராயோ.

மண்ணாள் அரசிருந்தும் மைந்தனிலை என்று மனப்
புண்ணாளராகிப் புலம்புகின்றோம் புன்மைஅறப்
பெண்ணாண் அலியலாப் பிஞ்ஞகனார் கொஞ்ச வரும்
கண்ணாளா நீஉன் கடைக்கண்ணாற் பாராயோ.

மண்களிக்கு மாறோர் மகவருளி வாழ்த்தெளியோம்
கண்களிக்கு மாறுனது காட்சிதரல் ஆகாதோ
விண்களிக்கும் வெள்ளை விடைப்பாகர் தம்இடத்துப்
பெண்களிக்கக் கொஞ்சிவரும் பிள்ளைப் பெருமானே.

முத்தமிட்டுக் கொஞ்சி முலைப்பால் இனிதூட்டிக்
கைத்தலத்தில் ஏந்திஇரு கண்குளிரப் பார்த்தெமது
சித்தங் குளிரஒரு சேய்அருளாய் ஞாலம்அருள்
வித்தகியாள் கொஞ்சி விளையாடும் பாலகனே.

இன்றுவரும் நாளைவரும் என்றெமது காலமெலாம்
சென்றதலாற் சேயின் திருமுகத்தைக் கண்டறியோம்
குன்றுதொறும் ஆடுங் குமரையா எங்குறையை
என்று தவிர்ப்பாயோ...

Friday, 31 May 2013

13. குழந்தைச் செல்வம் வேண்டுமா? பாம்பன் சுவாமி அருளிய மந்திரங்கள்!

முருகப்பெருமான் அருள் பெற்ற ஞானியருள் குமரகுருதாசரான பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதருக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர். முருகப்பெருமானையே வாழ்வில் முழுதும் பற்றுக்கோடாகக் கொண்டு முருகனருளால் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். செந்தமிழில் 6666 பாமாலைகளைப் புனைந்து முருகனுக்குப் பூமாலையாகச் சூட்டி மகிழ்ந்தவர். அவர் இயற்றிய 6666 பாடல்களுள் 60ஆவது மண்டலத்தில் 4-ஆவது அத்தியாயத்தில் உள்ளது வேட்குழவி (குழவி-குழந்தை) வேட்கை. இது கலிநிலைத்துறையில் அமைந்த பாக்களை உடையது.

இப்பாடலின் அடிக்குறிப்பில், "இருத்திருப்பத்து, காலை, மாலை பூஜிக்கப்பட்டுப் பத்திப்பிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்'' என்று பாம்பன் சுவாமிகள், இப்பாடலைப் படிப்பதனால் உண்டாகும் பலனைக் குறிப்பிட்டுள்ளார்.

நன்மக்கட் பேற்றை விரும்புபவரும் சந்ததி விருத்தியாக விரும்புபவரும் இதைப் பாடிப் பலன் பெறலாம். வேட்குழவி வேட்கையில் மொத்தம் பத்துப் பாடல்கள் உள்ளன.

பதினே டொழன்றும்விழை செய்ய பாதமோலிடநன்
மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
கதியே வேற்குழவி நினைக் காத லாற்றழுவ
நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே! (1)

சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன்குழைகள்
மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவி
ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
கூவை வெறுத்தகண்க ளிச்சை கொள்ளு கினிறனவே! (2)

பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ 
சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து 
தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ 
கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே. (3)

பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக் 
கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை 
என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ 
உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே. (4)

எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங் 
கண்ணே செங்குழுவீ யென்றன் கண்க ணாடழகே 
தண்ணே றும்வதன முத்தந் தாரா யோயிறிது 
நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ (5)

முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு 
வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ் 
சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள 
வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ. (6)

ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல் 
வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள் 
மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்துகொள்ள 
மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ (7)

பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும் 
இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா 
அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென் 
துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ. (8)

கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண் 
கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள் 
பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன் 
தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே. (9)

மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக் 
காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான் 
ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன் 
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ. (10)

Saturday, 27 October 2012

12. கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்!



திருமந்திரம் – திருமூலர் அருளியது

ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த்தோத்திரங்கள் சொல்லுமே.

சகலகலாவல்லிமாலை - குமரகுருபர சுவாமிகள் அருளியது
கட்டளைக் கலித்துறை
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனற் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.
2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தௌிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.
3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே.
5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதௌி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர்
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே.
6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தௌிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.
7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.
8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே.
9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.
10

Friday, 28 September 2012

11. சிவபெருமான் போற்றி!



கைதர வல்ல கடவுள் போற்றி 
ஆடக மதுரை அரசே போற்றி

கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக் காரமு தானாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி 
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி

மின்னா ருருவ விகிர்தா போற்றி
கல்நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆவா என்றனக் கருளாய் போற்றி 
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி

இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவ போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி 
விரைசேர் சரண விகிர்தா போற்றி

வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி 
உடையாய் போற்றி உணர்வே போற்றி

கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி 
நெறியே போற்றி நினைவே போற்றி

வானோர்க் கரிய மருந்தே போற்றி
ஏனோர்க் கெளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
ஆழா மேயருள் அரசே போற்றி 
தோழா போற்றி துணைவா போற்றி

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரையுணர் விறந்த ஒருவ போற்றி 
விரிகடல் உலகின் விளைவே போற்றி

அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் 
சென்னியில் வைத்த சேவக போற்றி

தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி 
மானோர் நோக்கி மணாளா போற்றி

வானகத் தமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி 
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளத் தமுதே போற்றி
கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும் நாயேற் கருளினை போற்றி 
இடைமரு துறையும் எந்தாய் போற்றி

சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவை யாறா போற்றி
அண்ணா மலையெம் அண்ணா போற்றி 
கண்ணார் அமுதக் கடலே போற்றி

ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு வானாய் போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி 
மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி

குற்றா லத்தெங் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
பாங்கார் பழனத் தழகா போற்றி 
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி

அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழிரு மூவர்க்
கத்திக் கருளிய அரசே போற்றி
தென்னா டுடைய சிவனே போற்றி 
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி

ஏனக் குருளைக் கருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி 
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி

களங்கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி 
நித்தா போற்ற நிமலா போற்றி

பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி 
முறையோ தரியேன் முதல்வா போற்றி

உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றிமணாளா போற்றி
பஞ்சே ரடியாள் பங்கா போற்றி 
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி

இலங்கு சுடரெம் ஈசா போற்றி
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலைநா டுடைய மன்னே போற்றி 
கலையா ரரிகே சரியாய் போற்றி

திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி
பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி 
துரியமும் இறந்த சுடரே போற்றி

தெரிவரி தாகிய தெளிவே போற்றி
தோளா முத்தச் சுடரே போற்றி
ஆளா னவர்கட் கன்பா போற்றி
ஆரா அமுதே அருளே போற்றி 
பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி

தாளி அறுகின் தாராய் போற்றி
நீளொளி யாகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக் கரிய சிவமே போற்றி 
மந்தர மாமலை மேயாய் போற்றி

எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
கருங்குரு விக்கன் றருளினை போற்றி 
இரும்புலன் புலர இசைந்தனை போற்றி

படியுறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடுவீ றானாய் போற்றி
நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற்
பரகதி பாண்டியற் கருளினை போற்றி 
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி 

செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன் 
குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி 

புரம்பல எரித்த புராண போற்றி
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றிபோற்றி புராண காரண 
போற்ற போற்றி சயசய போற்றி 

(மாணிக்கவாசகர் - திருவாசகம் - போற்றித் திருஅகவல் பதிகத்தில் இருந்து ஒரு பகுதி)